காயங்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தில் பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு



(ந.குகதர்ஷன்)
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட காயங்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தில் பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பாக பெற்றோர் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

பாடசாலை அதிபர் சி.மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாகரை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமூக சேவையாளர் எஸ்.அஜந்தா, ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது 1சி வகையினை சேர்ந்த ஒரு பாடசாலை பல படிகளை தாண்டி செல்ல வேண்டிய நிலையில் காணப்படுகிறமை தொடர்பில் கலந்து கொண்டோர் அவதானித்துக் கொண்டனர்.

இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களை கல்வியில் கரை சேர வைக்க வேண்டும் எனில் மேலதிக நேரமெடுத்து மேலதிக கற்றல் செயற்பாட்டை செய்வித்தால் தான் அது முடியும். இது எமக்கு பெரும் சவாலாக உள்ளது என பாடசாலை அதிபர் சி.மோகனசுந்தரம் தெரிவித்தார்.