தொல்பொருள் தேடிய நால்வர் கைது

வெலிமடை, கிரிவெல்பெத்த வனப்பகுதியில் தொல்பொருள் தேடி அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக வெலிமடை பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.