ஒரே தினத்தில் வாக்கெண்ணும் பணியை முன்னெடுக்க முடியும்!- மஹிந்த

மாதிரி வாக்கெடுப்பு அனுபவம் தொடர்பில் நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவில் விசேட ஒன்றுகூடல் இடம்பெற்றது. அனைத்து மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். தேர்தல் வாக்கெடுப்பின் பின்னர் வாக்கெண்ணும் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் மாதிரி வாக்கெடுப்பின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

நாளை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் சாரம்சம் உள்ளடக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வாக்கெண்ணும் நடவடிக்கைகளின் போது ஒரு மீற்றர் தூரத்தை பின்பற்றும் வகையில் நிலையங்களை எவ்வாறு இனங்கண்டு கொள்வது. ஆகஸ்ட் 5 ம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டதையடுத்து 6 ம் திகதி வாக்கெண்ணும் பணியை நிறைவு செய்ய முடியும். மேலதிக தினங்களை வாக்கெண்ணும் பணிகளுக்கென ஈடுபடுத்துவது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டிருந்தது. எனினும் தேர்தல் ஒத்திகையின் ஊடாக ஒரே தினத்தில் வாக்கெண்ணும் பணியை முன்னெடுக்க முடியும் என்ற தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.