கைக்குண்டுடன் போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைது!

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரின் உதவியாளர் ஒருவர் கிரேண்ட்பாஸ் பகுதியில் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின்போதே இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சாந்த குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.