மட்டு - தேத்தாத்தீவு விபத்தில் 13 வயது சிறுவன் பலி

(லக்ஸ்மன்) 
இன்று(26) மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 13 வயதுடைய சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

இவ் விபத்து பற்றி தெரியவருவதாவது,
வீதி ஓரத்தில் நின்ற ஆட்டோ ஒன்றை கார் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதன்போது ஆட்டோவிற்கு பின் நின்ற 13 வயது உடைய ரிஷ்கிம் எனும் சிறுவனே பலியானார். இவர் காத்தான்குடியை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை தேத்தாத்தீவில் வியாபாரம் செய்து கொண்டு இருந்த நேரத்திலே இது நடைபெற்றிருந்தது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.