தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டிலான 20ஆவது திருத்தம் குறித்த ஆய்வரங்கு


 இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான ஆய்வரங்கு யாழில் நடைபெற்றது.

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.

இந்த ஆய்வரங்கில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடக்கவுரையை ஆற்றியதுடன் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான கோசலை மதன் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவுகளும் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றினார்.

இதில், 20ஆவது திருத்தம் சிறுபான்மை இனங்களுக்கு மட்டுமன்றி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராயப்பட்டது.