ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்!


முன்னாள் எம்.பி ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சைபெற்றுவரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5111 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் (28) 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 9205 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இலங்கை மருத்துவமனை அமைப்பில் ஒதுக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 5,000 ஆகும். தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை வரம்பை மீறியுள்ளதால் நோய் ரீதியில் சிக்கல்களை காட்டாத நோயாளர்களை மருத்துவமனை அல்லாத இடைநிலை மையங்களுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

இதற்கமைய மட்டக்களப்பில் அமைந்துள்ள எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவிற்கு சொந்தமான தனியார் பல்கலைக்கழகம் நேற்று (28) முதல் கொரோனா சிகிச்சை மத்தியநிலையமாக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நோயாளர்கள் 1200 பேருக்கு பயன்படுத்த கூடிய இந்த மத்தியநிலையம் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் மருத்துவர்களின் முழு மேற்பார்வையில் இயங்குகிறது.