நாங்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி என்ற பாதையில் தொடர்ச்சியாக செல்வோம் - இரா.சாணக்கியன்

(ரூத் ருத்ரா)
நாங்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி என்ற பாதையில் தொடர்ச்சியாக செல்வோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சந்திவெளி எக்கோ விளையாட்டு கழகத்தினால் பிரதேச கழகங்களுக்கிடையே கடினப் பந்து சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத் தலைவர் சி.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இரா. சாணக்கியன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
காணாமல் ஆக்கபட்டவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள் அவர்கள் தங்களது முகவரியினை மாற்றி வெளிநாடுகளில் வாழ்கின்றனர்
என்று அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல யாழ்ப்பானத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இதன் போது அருகில் இருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதனை கேட்டு சிரித்து கொண்டு இருந்தார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது; அரசியலுக்காக அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்று அன்பான வேண்டுகோளை அவ் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.

குறித்த சுற்றுப்போட்டியில் 11 கழகங்கள் பங்கு பற்றியதுடன் 11 அணிகளாக போட்டியிட்டன. கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று கிரான்,ஏறாவூர் பற்று செங்கலடி,போன்ற இடங்களைச் சேர்ந்த விளையாட்டு கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

22.08.2020.ஆரம்பமான போட்டி நிகழ்சியானது நேற்று(3) மாலை முடிவுற்றது.

இறுதிப்போட்டியில் சித்தாண்டி வாணவில் விளையாட்டு கழகம் மற்றும் வந்தாறுமூலை டயமன்ட் விளையாட்டு கழகம் ஆகியன போட்டியிட்டன.
போட்டி முடிவில் இந்த வருடத்திற்கான எக்கோ கிண்ணத்திற்கான சம்பியனாக சித்தாண்டி வானவில் கழகம் வெற்றி பெற்று சாதனை படைத்தது.