ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் 'சுபீட்சத்தின் நோக்கு' எண்ணக்கருவுக்கமைய 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் செயல் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளில் ரூபாய் 10 லட்சம் பெறுமதியான 14 வீடுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அவர்களால் வைபவரீதியாக நேற்று திறந்து வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் திருக்கோவில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.அனோஜா கிராமசேவை நிருவாக உத்தியோத்தர் எஸ்.பரிமளவாணி மற்றும் வீடமைப்பு உத்தியோத்தர் கே.திவாகரன் ஆகியோர் இணைந்து இவ் வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












.jpeg)




