பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் குளத்திற்குள் கவிழ்ந்து விபத்து !

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று நேற்று மாலை நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றியுள்ள குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் போது பஸ்ஸில் குறைந்தது 30 ஊழியர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த மழை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் எந்த ஊழியர்களுக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை எனவும் நாடாளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.