வாழைச்சேனை கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனையில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார்.
ஜந்து பிள்ளைகளின் தந்தையான செ.வைத்தியலிங்கம் வயது(61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வெலிக்கந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த சனிக்கிழமையன்று ஆத்துச்சேனை பிரதேசத்தில் உள்ள வயலில் விதைப்பு நடவடிக்கைக்கு சென்று அங்கு வயல் காணி தொடர்பாக அதிகாரிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் வயல் விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உறவினருடன் மாலை வேளை வீடு திரும்பும் வழியில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக உறவின்ர்கள் தெரிவித்தனர். இவரது சடலம் இன்று திங்கட்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4