சுற்றுலா பயணிகள் தமது நடமாட்டத்தினை கரையோரத்தில் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்

(ரூத் ருத்ரா)
அன்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாசிக்குடா சுற்றுலா பிரதேசத்தின் கடற்கரையினை இணைக்கும் நீர் தேக்கமானது உடைப்பெடுத்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் தமது நடமாட்டத்தினை கரையோரத்தில் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

சிறிய படகுகள் மூலமாகவே பயணம் மேற்கொள்கின்றனர்.

குறித்த நீர் தேக்கம் ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ளத்தில் உடைப்பெடுப்பது வழங்கமாகும். ஊருக்குள் இருந்து வரும் நீரானது நீரோடைகள் மூலம் இவ் தேக்கத்தினை சென்றடைந்து பின்னர் கடலை சென்றடைகிறது. இவ் நிலமை காரணமாகவே உடைப்பெடுத்து கடற்கரை பிரதேசத்தினை மாசுபட வைப்பதுடன் அசௌகரியங்களும் ஏற்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து நீரோட்டத்திற்கு ஏற்ப வடிகான் வசதிகளை ஏற்படுத்தி வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு பொது மக்கள் கேட்கின்றனர்.