விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் !

(காரைதீவு  நிருபர் சகா)
கொரோனாத் தொற்றிலிருந்து நாட்டு மக்களையும் நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ.சிவன் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் என்பன இணைந்து விநாயகபுரம் சிவன் ஆலயத்தில் இடம்பெற்றது.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலய பிரமகுரு சிவ ஸ்ரீ யுதர்சன் குருக்கள் தலமையில் இடம்பெற்றதுடன் இதில் சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் சிவ ஸ்ரீ ஆ கிருபாகரசர்மா ஆகிய சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டதுடன் அதிகாலை 05.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு ரி.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் பிரதேச செயலக உத்தியோகத்தர் எஸ். நடேசன்,  திருநாவுக்கரசு நாயனார் குருகுலபாபணிப்பாளர் கன.இராஜரெட்ணம், தலைவர் எஸ். கோபால். மற்றும் தர்மகர்த்தாக்கள் ஏனைய ஆலயங்களின் நிர்வாகத்தினர் அதிகாரிகள் கலாச்சார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன்,

இப்பிராத்தனை நிகழ்வானது 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் 'ஆலயதரிசனம்' நிகழ்வில் ஒலிபரப்பு செய்யப்பட்டது