கொரோனா வைரஸ் புதிய பொழுதுபோக்காக குரங்கு வால் தாடி! 2021 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு புதிய வரவு!கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதால், பலருக்கு ஒரு புதிய பொழுதுபோக்கை எடுத்துக்கொள்வதற்கோ மற்றும் நம் தோற்றத்தை மாற்றுவதற்கு வழிவகுத்தது என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், சிலர் தங்கள் தலை முடியை வெட்டினார்கள் மொட்டை அடித்தார்கள், ஏனையவர்கள் இருந்ததை விட நீளமாக தலை முடியை வளர்ந்திருக்கிறார்கள்.

ஆனால், ஆண்களின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் தாடியை சீர் செய்வதில் சமீபத்திய போக்கை விட குரங்கு வால் தாடி 2021 ஆம் ஆண்டின் புது ஸ்டைலாக மாறியுள்ளது.

அது என்னது குரங்கு வால் தாடி என யோசிக்கிறீர்களா?

அது தாடி மற்றும் மீசையை ஒரு நீண்ட குரங்கு வால் போன்ற வடிவத்தில் ஒரு பக்கவாட்டில், தாடை மற்றும் கன்னம் வழியாக சென்று, பின்னர் வாயின் பக்கம், பின்னர் மேல் உதட்டிற்கு மேலே முடிகிறது இது தான் குரங்கு வால் தாடி என்கிறார்கள்.

பிரைமேட் இனத்தினால் ஈர்க்கப்பட்ட இந்த தோற்றம் முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புழக்கத்தில் இருந்தது.

எம்.எல்.பி பேஸ் போல் விளையாட்டு வீரர் மைக் பியர்ஸ் வினோதமான தாடி அலங்காரத்தை மேற்கொண்டு தனது அணியினரிடமிருந்து சிரிப்பைப் பெற்றார்.

இருப்பினும், இந்த தோற்றம் விரைவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆண்கள் தற்போது குரங்கு வால் தாடியை தங்களுக்கு பிடித்த வகையில் புதிய ஸ்டைலில் அலங்கரிக்க முயற்சித்து வருகிறார்கள்.