வௌிநாடுகளில் உள்ள 66,000 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை! ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி!வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இன்று (13) முதல் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படும் 300 பேர் நாளாந்தம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் வரையில் 66,000 பேர் நாட்டிற்கு வருவதற்காக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன்  ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நபர் ஒருவருக்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் நீலிக மாளவிகே மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழக ஆய்வு குழு இதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.