மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை! பல பகுதிகள் வெள்ளத்தில்!



(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரான காலநிலை நிலவிய போதும் நேற்றிரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில், ஏறாவூர் மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் வெள்ளநீர் வடிந்தோட முடியாதுள்ள காரணத்தால் அப்பகுதி நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

இதன் காரணமாக குறித்த பகுதியால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளன.

அத்துடன், வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் அப்பகுதி வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

குறித்த பகுதியால் செல்லும் வாகனங்களை மாற்று வழிகளிகள் ஊடாக பாயணிக்குமாறு களத்தில் நின்று ஏறாவூர் பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.