ஆசிரியர் தண்டித்ததால் இரு மாணவிகள் நஞ்சுவிதை உண்டதில் ஒருவர் மரணம் மற்றவர் ஆபத்தான நிலையில்


(மண்டூர் ஷமி)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் அவர்கள் கல்வி கற்று வரும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தண்டித்ததால் இரு மாணவிகள் நஞ்சு விதையினை உண்டு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் நேற்று  இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தரம்-10 இல் சங்கங்கேணி தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று வந்த சசிக்குமார் திப்திகா(15) டஸ்கரன்-திலோதிகா(15) மற்றும் ஆகிய இருவரும் கடந்த இரு தினங்களாக பாடசாலைக்கு செல்லாதமையினால் அவர்களின் இருவரின் வீட்டுக்கு சென்ற ஆசிரியர் அவர்களை பாடசாலைக்கு வரவில்லை என திட்டியதனால் அவர்கள் இருவரும் அவர்களின் வீட்டிலிருந்து அயலில் உள்ள ஆற்றுப்பக்கம் உள்ள நஞ்சு மரத்தில் உள்ள நஞ்சுக்காய்களை உண்டு விட்டு வீட்டுக்கு சென்று; வாந்தி எடுத்ததனைக்கண்ட வீட்டார் பின்னர் வாழைச்சேனை வாத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சசிக்குமார் திப்திகா(15 என்பவர் மரணமடைந்துள்ளதான விசாரணைகள் மூலம் அறிய வந்துள்ளது.


சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் அவர்கள் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளளார்.


சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்