பியூச்சர் மைன்ட் கின்டர் கார்டன் முன்பள்ளியின் பெற்றோர் - முன்பள்ளி பிள்ளைகளுடனான ஒன்றுகூடல் வைபவம்

(சித்தா)

பியூச்சர் மைன்ட் கின்டர் கார்டன் முன்பள்ளியில் கல்வி கற்று தரம் ஒன்றுக்கு செல்லும் பிள்ளைகளுக்கான ஒன்றுகூடல் வைபவம் முன்பள்ளியின் இயக்குநர் திரு.விஸ்வலிங்கம் மனோகரன் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம் பெற்றது. 

இவ் ஒன்று கூடலில் மட்டக்களப்பு கல்வி வலய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.முத்துராஜா புவிராஜா அவர்களும் திரு.ம.யூட் சுரேன்ராஜ் அவர்களும் அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

பிள்ளைகள் தங்களது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்த அவர்களுக்கு சந்தர்ப்பமும் அளிக்கப்பட்டது. மேலும் 2019 ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாவது நிலை சித்திபெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவான திரு.ம.யூட் சுரேன்ராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது பிள்ளைகளுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது