ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது – ஜி.எல். பீரிஸ்


ஜெனீவா விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று  (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜெனீவா விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்றும் அதற்கான அவசியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரையறைக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்ளக விவாரத்தில் தலையிடவும் இலங்கைக்கு எதிராக செயற்படவும் மனித உரிமை ஆணையாளருக்கு அதிகாரமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.