
(வரதன்)
ஜீவ தரு உதான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆரோக்கியமான எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் போசணை மட்டத்தை பாதுகாத்தல் மற்றும் கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றம் 5 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்குரிய போசணை மட்டத்தை பாதுகாப்பதற்கு வசதியாக வீட்டுத்தோட்டங்களில் முருங்கை மரப் பயன்பாடுகளை அறிந்து அதன் நுகர்வினை ஏற்படுத்துவதனால் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் 17 கமல சேவைகள் நிலையங்கள் ஊடாக நிலையத்திற்கு 1000 கன்று வீதம் விநியோகம் செய்யப்பட்டது.
இந் நிகழ்வு இன்று மண்டபத்தடி கொக்கடிச்சோலை கமநல சேவைகள் நிலையத்திலும், மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் ,வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலம் நடைபெற்றது.
இந் நிகழ்வானது கொக்கடிச்சோலை கமநல சேவைகள் திணைக்கள பெரும்பாக உத்தியோகத்தர் கோபாலபிள்ளை உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் கி.ஜெகன்நாத் மற்றும் மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர்.பி.ரமேஸ் மற்றும் தாதியர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் கமநல நிலைய உத்தியோகத்தர்கள் ,பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
















.jpg)

.jpeg)




