சீனாவிலிருந்து நாட்டை வந்தடைந்த 5 இலட்சம் தடுப்பூசிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
மார்ச் 31 ஆம் திகதி இலங்கைக்கு சீனா இலவசமாக வழங்கிய 6 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக மீண்டும் சீனாவிலிருந்து வந்த மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கையின் வைரஸ் தடுப்புப் பணிக்கு முக்கிய பங்காற்றும் என்று நம்புகின்றோம்.
கொரோனா வைரஸ் பரவல், முழு மனிதகுலத்தின் பொது எதிரியாகும். சுகாதாரமான எதிர்காலத்தை உருவாக்குவது எமது பொது இலக்காகும். ஒற்றுமையுடன் உதவியளிப்பது வைரஸ் தடுப்பிலான மிக வலிமையான ஆயுதமாகும். அதற்கமைய தடுப்பூசி பகிர்வானது சிறந்த வைரஸ் தடுப்பு வழிமுறையாகும்.
சீனா வளரும் நாடுகளுக்கு 200 கோடி அமெரிக்க டொலரையும் 80 க்கும் அதிகமான நாடுகளுக்கு தடுப்பூசி உதவியையும் வழங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 300 கோடி டொலர் சர்வதேச உதவியை வழங்கும் என்று கடந்த 21 ஆம் திகதி சீன ஜனாதிபதி உலக சுகாதார உச்சி மாநாட்டில் அறிவித்தார்.
உலக நாடுகளுக்கு மேலதிக தடுப்பூசிகளை இயன்ற அளவில் விநியோகித்து, சீன தொழில் நிறுவனங்கள், வளரும் நாடுகளுக்குத் தொழில் நுட்பங்களை சீனா விநியோகிக்கும். மேலும், பரிமாற்றம் செய்து இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளுடன், ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு ஆதரவளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
வைரஸ் பரவல் ஏற்பட்டது முதல், சீனாவும் இலங்கையும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இரு நாட்டு நட்புறவு மேலும் வளர்ந்துள்ளது. இலங்கையின் சிறந்த அண்டை நாடாகவும், நண்பராகவும் சீனா உள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் நன்மை தரும் விடயங்களில் நிச்சயம் ஈடுபடும் என்றார்.