அத்தியாவசிய பொருட்தட்டுப்பாடு- பகிரங்கமாக ஏற்றது அரசாங்கம்



அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு இருப்பதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக வெளியாகின்ற தகவல்களை அண்மையில் பி.பி.சி செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்நிவாட் கப்ரால் நிராகரித்திருந்தார்.

இருந்த போதிலும், கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய கல்வி அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டளஸ் அழகப்பெரும, நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பிவிடும் என்றும் வஅர் கூறினார்