திருக்கோவிலுக்கு நாமல் விஜயம்!திருக்கோவில் பிரதேசத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விஜயம் செய்துள்ளார்.

இதன்போது திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்திற்கான 1.5மில்லியன் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் விளையாட்டுத்துறையை வலுப்படுத்தி சர்வதேச ரீதியாக இளைஞர்கள் சாதனைகளை படைப்பதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச இதன்போது கருதது வெளியிட்டார்.

கொவிட் 19 நோய் தாக்கம் பொருளாதாரம் கல்வி என அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும் பல சவால்களுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்காக அபிவிருத்திகளை முன்னேடுத்து வரும் இதேவேளை, சர்வதேச ரீதியாக பலம் பொருந்திய நாடாக இலங்கையை கட்டியெழுப்புவோம் என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி வீரசிங்க டாக்டர் திலக் ராஜபக்ஷ பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் அமைச்சரின் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் பொலிசார் என பலரும் கலந்த கொண்டு இருந்தனர்.