புதிய அரசாங்கம் - 18 அமைச்சர்கள்?


பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்திற்கு 18 அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 அமைச்சுப் பதவிகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 அமைச்சுப் பதவிகளும் கிடைக்குமென அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பல அமைச்சுப் பதவிகளை வகிக்கும் எனத் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை எனவும், உருவாக்கப்படவுள்ள அரசாங்கம், தேசிய அரசாங்கமாகவே அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 18 ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.