மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிதியமைசர் பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – ஹர்சா டி சில்வா

 


நிதியமைச்சராக பதவியேற்குமாறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்

வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்களின் விருப்பத்திற்கு எதிராக உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தில் நான் ஏன் இணையவில்லை என பலர் கேட்பதால் நான் இதனை தெரிவிக்கின்றேன்-

முதலில் தற்போதைய நெருக்கடிகளிற்கான காரணம் என்னவென பார்ப்போம்- இலங்கையில் காணப்படும் மோசமான அரசியல் கலாச்சாரமே முக்கிய காரணம்.

இலங்கையின் தற்போதைய அரசியல் என்பது பதவிகளிற்கான ஆசைகளை அடிப்படையாக கொண்டது- நாட்டை பற்றி பொருளாதார திட்டமிடல் கொள்கைகள் குறித்து சிந்திக்காதது.

பல கதைகளை தெரிவித்து அதிகாரத்தை ஆட்சியை கைப்பற்றுவதே அவர்களின் பொழுதுபோக்கு-

இலங்கையை உலகில் ஒரு ஒளிர்விடும் நட்சத்திரமாக மாற்றுவதற்கான பங்களிப்பை வழங்குவதே எனது நோக்கம்இஇது அதற்கான சிறந்த வாய்ப்பாகும்இபுதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவற்கான முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் அழகான அரசியல் கலாச்சாரத்தை எதிர்பார்க்கின்றனர்இ என்னால் இதற்கு எதிராக செயற்பட முடியாது.

பலர் என்னை நிதியமைச்சராக பதவியேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்-

நான் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லைஇமக்கள் அவ்வாறான அரசியல் நாடகத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஒரு குடும்பத்தை பாதுகாக்க அரசியலில் ஈடுபடுவதை விட வீட்டிற்கு செல்வது சிறந்தது.

ஜனாதிபதியின் முடிவுகள் நாட்டு மக்களின் விருப்பங்களின் அடிப்படையிலானதாக அமைந்திருக்கவேண்டும்.

அதற்காக நாங்கள் பல தடவை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை.

புறக்கணிக்கப்பட்ட ஆளும் வர்க்கத்தை பாதுகாப்பதை விட அதனை அதிகாரத்திலிருந்து அகற்றுவதே இன்றைய தேவை- தனிப்பட்ட நலன்களிற்காக எனது கொள்கையை கைவிட நான் தயாரில்லை.

இன்று அனைவரும் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அரசியல் சுயநலத்திற்காக இதனை மறைக்க முடியாது