நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து போராட்டம் - தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம்


ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (18) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.