கடந்த ஜூலை மாதம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வாகனேரி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட தென்பகுதியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்தனர்.
குறித்த நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்டவிரோத புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்து வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த வழக்கு இன்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களுக்கு தலா ஒருவர் 50 ஆயிரம் ரூபா வீதம் 6 பேரும் 3 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் அதனை செலுத்தாத பட்சத்தில் 3 வருட சிறை தண்டனை என நீதவான் தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.