தற்போதைய அமைச்சரவைக்கு புதிய அமைச்சு பதவிகள் எதுவும் உருவாக்கப்படக் கூடாது - டலஸ் அழகப்பெரும !

  


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் 4 நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும டுவிட்டர் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார ஸ்திரத்தன்மையில் நாடு மிகவும் நெருக்கடியான கட்டத்தில் இருப்பதால், தற்போதைய அமைச்சரவைக்கு புதிய அமைச்சு பதவிகள் எதுவும் உருவாக்கப்படக் கூடாது என்றும், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படக் கூடாது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், குழுவாக எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்காவிட்டாலும், சர்வகட்சி அரசின் யோசனைக்கு உடன்படுவதாகவும், கல்வியை கொரோனா தொற்றுநோய்க்கு முன் இருந்த நிலைக்கு மீட்டெடுப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.