மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசிகளை துரிதமாக வழங்க தீர்மானம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் !கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பு தடுப்பூசிகளை துரிதமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுகாதாரப் பழக்கவழக்கங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.