இலங்கை நிச்சயம் மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது – ஜனாதிபதி !நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நிச்சயம் மீண்டு வரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற பெரஹரா இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டு வரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சவாலான காலங்கள் வரக்கூடும் எனவும் அதிலிருந்து மீண்டு, மக்கள் நாட்டுக்கான புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.