திருக்கோவிலில் செஜய மைக்றோகிரடிட் நிறுவனத்தினரால் 175 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5000 ரூபா வவுச்சர் வழங்கி வைப்பு


செஜய மைக்றோகிரடிட்  நிறுவனத்தினரால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5000 ரூபா வவுச்சர் வழங்கும் நிகழ்வு  திருக்கோவில் கலாசார மண்டபத்தில்  இன்று இடம்பெற்றது .      

வரையறுக்கப்பட்ட செஜய மைக்றோகிரடிட்  நிறுவனம் தனது நிதி அனுசரணையாளரான ஜப்பானில் உள்ள GOJO  அறக்கட்டளையின் நிதிபங்களிப்புடன் எமது நாட்டில் சுமார் 7400 க்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ரூபா 5000 பெறுமதியான சத்துணவுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வவுசர்களை வழங்கி வருகிறது 

அதன்  திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட சுமார் 175 கர்ப்பிணி தாய்மார்களுக்கான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டது .

கிளை முகாமையாளர் கே.செல்வகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற  இந் நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர்   R .W கமலராஜன் , திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன் , திருக்கோவில்  பிரதேச செயலகத்தின்  உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் . செஜய  கிழக்கு பிராந்திய முகாமையாளர் வீ.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு  தாய்மார்களுக்கு வவுச்சர்களை வழங்கி வைத்தனர் .