நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிக்கிறது!


நாளை மற்றும் நாளை மறுதினம் (29) முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிப்பதற்கு அனுமதி வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க ஞாயிற்றுக்கிழமை (நவ.27) தெரிவித்தார்.

இதன்படி 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையிலான 20 வலயங்களுக்கு பகலில் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதிக்கப்பட்டதாக ஜானக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். இதன்படி பல வாரங்களாக நீடித்த இரண்டு மணி நேர மின்வெட்டு 20 நிமிடங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.