காத்தான்குடியில் கைக்குண்டை காட்டி கொள்ளைகளில் ஈடுபட்ட இருவர் கைக்குண்டுடன் கைது
(சரவணன்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள  காங்கேயனோடை பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களை கைகுண்டைகாட்டி கொள்ளையடுத்துவந்த இருவரை நேற்று புதன்கிழமை (23) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்துள்ளதுடன் கையடக்க தொலைபேசிகள், 50 ஆயிரம் ரூபாய் பணம், வாசனைத் திரவியங்கள் உட்பட வீட்டு பாவனைப் பொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்சியாக பல வீடுகளில் கைகுண்டுகளை காட்டி கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுவந்த சம்பவங்கள் இடம்பெற்றுவந்துள்ளது இதனையடுத்து கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சப் இனஸ்;பெக்டர் ஏ.எஸ்.றஹீம்  தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று மாலை இரு கொள்ளையர்களை கைக்குண்டுன் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகள், 50 ஆயிரம் ரூபாய் பணம், வாசனைத் திரவியங்கள் உட்பட வீட்டு பாவனைப் பொருட்ககளை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று 24 ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.