# .

வீடொன்றில் இரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக சடலமொன்று கண்டெடுப்பு!


கல்கிஸ்ஸையில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தெலவல- பொச்சிவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பேருந்து சாரதி எனவும் அவர் வேறு ஒருவருடன் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் கூறினார்.