# .

தற்கொலை குண்டுதாரியின் சகாவிற்கான தண்டனை மரணதண்டனையாக மாற்றம்!


2004 இல் கொள்ளுப்பிட்டி பொலிஸ்நிலையத்தில் தற்கொலை குண்டுதாக்குதலில் ஈடுபட்ட பெண் தற்கொலை குண்டுதாரியின் சகாவிற்கான ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை நீதிமன்றம் மரண தண்டனையாக மாற்றியுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

சத்தியா என அழைக்கப்படும் செல்வக்குமார் சத்தியசீலா என்ற பெண் தற்கொலைகுண்டுதாரியின் சகாவை உடனடியாக கைதுசெய்யுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தண்டனைகளை உரிய விதத்தில் நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.