# .

கணவனால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு மனைவி பலி !


கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று (23) கணவனால் மனைவி இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொஸ்வத்த,மஹயயவத்த பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவல்கலையடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பெண் கொஸ்வத்தை பொலிஸாரால் அவரது வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 38 வயதுடைய கஹடவில, பொதுவடவன பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண்ணின் கணவர் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

47 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கொஸ்வத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.