மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகில் உள்ள வாவியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை அடையாளம் காண உதவுங்கள்!

(மண்டூர் ஷமி)

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காந்தி பூங்காவிற்கு அருகில் உள்ள வாவியில் கடந்த (26)ம்  திகதி பெண் ஒருவரின் சடலம் வாவியில் இருந்து மீட்கப்பட்டது.

குறித்த பெண் 35-50 வயது மதிக்கத்தக்கவர் தபோது பிரேதம் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை-தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட போது சடலம் இனங்காணப்படவில்லை அதற்மைவாக பிரேதத்தை உறவினர்கள்  முன்வந்து அடையாளப்படுத்தும் வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்

குறித்த பெண்ணின் பிரேதத்தை அடையாளம் கண்டவர்கள்  மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கோ தெரிவிக்கலாம்.