வீடொன்றில் அம்பியூலன்ஸ் சாரதியுடன் மனைவி : ஆத்திரமடைந்த கணவர் சாரதி மீது கத்திக்குத்து!

ஹம்பாந்தோட்டை கட்டுவெவ பிரதேசத்தில் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில்  ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பியூலன்ஸ் சாரதி மற்றுமொரு பெண்ணுடன் கட்டுவெ பிரதேச வீடு ஒன்றிலிருந்தபோது குறித்த பெண்ணின் கணவர்  அங்கு வந்துள்ளார். 

அங்கு தனது மனைவி அம்பியூலன்ஸ் சாரதியுடன் காணப்படுவதனை கண்ட கணவர்,  சாரதியைக் கத்தியால் தாக்கியுள்ளார்.  

இதனையடுத்து  காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான அம்பியூலன்ஸ் சாரதி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பணிபுரிவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.