செவிப்புலன் அற்ற மாணவர்களின் முக்கோண வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி. - 2012


மட்/YMCA  யின் அனுசரணையுடன் ஒக்டோபர் 26ம் திகதி  மட்ஃஇந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் கைதடி, இரத்மலானை, வாழ்வோசை மட்டக்களப்பு பாடசாலை அணிகள் பங்குபற்றியது.

இந்நிகழ்வை மட்/YMCA  பொதுச்செயலாளரும் நிறைவேற்று உத்தியோகத்தருமான கலாநிதி னு.னு டேவிட் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

மட்/இரட்சணிய சேனை தேவாலயத்தில் விஷேட செப வழிபாடுடன் ஆரம்பமாகி பின்  மூன்று அணியினரும் பாண்ட் வாத்திய குழுவினருடன் மட்/இந்துக்கல்லூp மைதானத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். பின் காலை 8.30 மணிக்கு போட்டிகள் ஆரம்பமாகின.

இதில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திருமதி. P.ளு.ஆ. சாள்ஸ் அவர்களும், மாவட்ட சமூக சேவை இயக்குனர் திரு. மணிவண்ணன் அவர்களும், இணைப்பாளர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு விஞ்ஞான பீடம் கிழக்கு பல்கலைக்கழகம். வைத்திய கலாநிதி மு.அருளானந்தம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இறுதியாக நடைபெற்ற போட்டியில் மட்ஃவாழ்வோசை அணியினர் 1ம் இடத்தையும், இரத்மலானை அணியினர் 2ம் இடத்தையும், கைதடி அணியினர் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
முறையே 13க்கு 11 என்ற புள்ளிகள் அடிப்படையில் மட்ஃவாழ்வோசை பாடசாலை மாணவிகள் வெற்றியீட்டினர்.
இப்போட்டியின் நோக்கம் பேச முடியாத, செவிப்புலனற்ற மாணவிகளும் சாதாரண மாணவிகளைப்போன்று தங்களாலும் திறமைகளை வெளிக்காட்ட முடியும் என்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது என்பது குறிப்பிடத்தக்கது.