வெல்லாவெளியில் மாலை நேர படிப்பக திறப்பு விழாவும் பரிசளிப்பும்.


வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் முயற்சியினாலும்  பழைய மாணவரும் மட்டக்களப்பு றொட்றிக் கழக தலைவரும் வருமான வரி திணைக்களத்தின் பணிப்பாளருமாகிய எம் கணேசராசா அவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் ஸ்தாபிக்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கான இலவச மாலை நேர படிப்பகமானது அன்மையில் திறப்பு விழா செய்யப்பட்டது.


இந் நிகழ்வானது வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் திரு த.விவேகானந்தம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அதிதியாக வருமான வரி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு எம்.கணேசராசா மற்றும் கவிஞ்ஞர் வெல்லவூர்க் கோவன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் விரைட் பியுச்சர் நேசகரம் நிறுவனத்தினால் வெல்லாவெளி பகுதியில் உள்ள பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்காக பதக்கம் அணிவித்து வங்கிக் கணக்கும் திறந்து வழங்கிவைக்கப்பட்டதுடன் வெல்லாவெளி பிரதேசத்திற்குப் பொறுப்பான கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு அ.நகுசாந் அவர்களும் பாடசாலையின் பழைய மாணவர்களும் ஊர்ப் பொது மக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.