
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுக சேவை திணைக்களத்தின் கீழ் திருச்செந்தூரில் இயங்கிவரும் ஐக்கிய மக்கள் சமுக அபிவிருத்திச் சங்கத்தினால் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) திருச்செந்தூர் முருகன் ஆலய வீதியில் மக்கள் நலன் கருதி நிறுவப்பட்ட பொது அறிவித்தல் பலகை திறந்துவைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்
பிரிவில் மரணாதார உதவி மற்றும் ஏழை / பெண் தலைமைதாங்கும் குடும்பங்களில் உள்ள
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் உதவிகள் பல இலவசமாக வழங்கிவரும் இச் சங்கமானது
புதியதொரு முயற்சியாக ஒவ்வொரு கிராமங்களிலும் வாழ்கின்ற மக்களின் நலன்கருதி கிராம
சேவை உத்தியோகத்தர்கள், ஆலயங்கள், பாடசாலைகள், பொலிஸ் மற்றும் கிராம நலன்புரி அமைப்புக்கள் என்பவற்றினால் அடிக்கடி
வெளியிடப்படுகின்ற அறிவித்தல்களை விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில்
வெளியரங்கப்படுத்துவதற்கு ஏதுவாக கிராமங்களில் உள்ள மக்கள் நடமாற்றம் அதிகமாக உள்ள
இடங்களில் மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதியுடனும் வியாபார ஸ்தாபனங்களினது பூரண
அனுசரணையுடனும் முதற்கட்டமாக திருச்செந்தூர் கிராமத்தில் பொது அறிவித்தல் பலகைகளை
நிறுவியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சமுக அபிவிருத்திச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் உ.உதயகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு அருளாளராக திருச்செந்தூர் முருகன் ஆலய பிரதம குரு நிரோசன் ஜீ கலந்துகொண்டதுடன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் மதன் அவர்களும் விசேட அதிதிகளாக கிராம சேவை உத்தியோகத்தர் தெ.சிவலிங்கம், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் யேசுதாசன், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவி நாகலெட்சுமி ஆகியோரும் இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்து பொது அறிவித்தல் பலகையினையும் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வினை மேலும் சிறப்பிக்குமுகமாக அருகிலுள்ள திருச்செந்தூர் முருகன் ஆலய வளாகத்தில் வில்வை மரக்கன்றுகளையும் நட்டுவைத்தார்கள். நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வினை மேலும் சிறப்பிக்குமுகமாக அருகிலுள்ள திருச்செந்தூர் முருகன் ஆலய வளாகத்தில் வில்வை மரக்கன்றுகளையும் நட்டுவைத்தார்கள். நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.