ஊடகங்களினுதவியால் வீதி வேலைகள் மீண்டும் ஆரம்பம்


பல மாதங்களாக கிடப்பில்கிடந்த காரைதீவு மத்திய வீதி வேலைகள் ஊடகங்களின் உதவியால் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
உலகவங்கி நிதியுதவியுடன் சீரமைக்கப்பட்டுவந்த மத்தியவீதி வேலைகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தன. அதனை பல தடவைகள் உரிய அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கூறியும் எவ்வித பலனும் கிட்டவில்லை.
இறுதியில் ஊடகங்களில் இது விடயம் தொடர்பில் செய்திகளும் கட்டுரைகளும் எமது செய்தியாளரால் எழுதப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் வேலைகள் ஆரம்பமாயிருப்பதுகண்டு மக்கள் ஊடகங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துவருகின்றனர்.

அதேவேளை விபுலானந்தா வீதி லெனின் வீதியைச் சந்திக்கின்ற சந்தியில் மரணப் பொறிகளாக வடிகான்மூடிகள் இல்லாமல் வீதியிருந்ததையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.







( வி.ரி.சகாதேவராஜா)