மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வாணி விழா நிகழ்வுகள் நேற்றைய தினம் 14.10.2013, திங்கட்கிழமை பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது சிறப்பு பஜனையுடன் ஆரம்பமாகியதுடன், பூசை நிகழ்வுகளை சிவஸ்ரீ.மங்களேஸ்வரசர்மா அவர்கள் நடாத்திவைத்தார்.
இவ்விசேட வாணி விழா நிகழ்வுகளில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் , சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், கிராம உத்தியோகத்தர்கள், பட்டதாரி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கலென அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந் நிகழ்வின்போது வறிய குடும்பங்களை சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வின்போது வறிய குடும்பங்களை சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.