இளைஞர்களை கொடிகள் கட்டுவதற்கும் போஸ்ரர் ஒட்டுவதற்குமே கடந்த காலங்களில் பயன்படுத்தியுள்ளார்கள் - சி.சந்திரகாந்தன்

கடந்த காலங்களில் இளைஞர்களை வெறுமனே கொடிகள் கட்டுவதற்கும் போஸ்ரர் ஒட்டுவதற்கும் மேடையமைப்பதற்கும் கட்சியின் ஏனைய வேலைகளுக்கும் மாத்திரமே பயன்படுத்திவந்துள்ளார்கள் அது நாம் அனைவரும் அறிந்த விடயமமேயென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி கூட்டம் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் கடந்த ( 26 ) இடம்பெற்றபோதே கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் கடந்த கால நிலமையினை நாம் இன்று மாற்றியமைக் வேண்டும், அதற்கு இளைஞர்கள் நீங்கள் முன்வர வேண்டும். என்பதுடன் நாளைய சமுதாயத்தை சிறந்த பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய பரிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்கள் கைகளில் தான் தங்கியுள்ளது. எனவே கிழக்கின் இன்றைய அரசியல் நிலைமையினை கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து ஒரே பாதையில் சென்றால் மாத்திரமே சிறந்த பலனை அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அடுத்து உரையாற்றிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன்  உரையாற்றுகையில் இன்றைய தலைவர்கள் இளைஞர்களே,இளைஞன் நினைத்தால் எதையும் மாற்ற முடியும் கடந்த 2008 ஆம் ஆண்டு முதன் முறையாக கிழக்கை ஒரு இளைஞர் ஆண்டு காட்டியுள்ளார்  இதை விட சிறந்த உதாரணம் எதுவும் எமக்கு தேவையில்லை என்று நினைக்கின்றேன் . தற்போது இருக்கின்ற இளைஞர்களை ஒரு தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நேக்கத்திற்காக இன்று நாம் கூடியுள்ளோம். எனவே இளைஞர்கள் முன்வர வேண்டும் பொறுப்புக்களை  கையில் எடுத்து  சமுக சிந்தனையுடன்  அரசியல் பங்குதாரராக மாற வேண்டும் , கடந்த கால கசப்பான அனுபவங்களை தட்டிவிட்டு கிழக்கின் விடிவிற்காக ஒன்றிணைவோம் என்று அவரது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதித் தலைவர் க.யோகவேல், கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜ் , தேசிய அமைப்பாளர் ப.தவேந்திரராஜா,  உதவிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கலென பலரும் கலந்து கொண்டனர்.