(தியாஷினி)
ஆலையடிவேம்பு
பிரதேச எல்லைக்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் பலவருடகாலமாக
வசித்துவருபவர்களுக்கான ரன்பிம அளிப்புக்களைக் கையளிக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் (02) புதன்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனால் மூன்று குடும்பங்களுக்கு அவர்களது காணிகளுக்கான
அளிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள ஸ்ரீ
தம்மரதன சிங்கள வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திற்கான காணியின் கையளித்தல்
படிவம் குறித்த பாடசாலையின் அதிபர் பி.எச்.பியதாசவிடம் பிரதேச செயலாளரினால்
கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.