டி.டி.எப்.சி. தேஷோதய டெவ்லொப்மென்ட் பினான்ஸ் கம்பனி லிமிடட்டின் 27வது கிளை மட்டக்களப்பில் இல 132,திருகோணமலை வீதி மட்டக்களப்பு எனும் முகவரியில் 09-05-2014 வெள்ளிக்கிழமை நேற்று திறந்து வைக்கப்பட்டள்ளது.
டி.டி.எப்.சி. தேஷோதய டெவ்லொப்மென்ட் பினான்ஸ் கம்பனியின் தலைவர் தலைவர் டாக்டர் வின்னியா ஆரியரட்ன தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டு மேற்படி டி.டி.எப்.சி. கம்பனியின் 27 வது கிளையை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் டி.டி.எப்.சி. தேஷோதய டெவ்லொப்மென்ட் பினான்ஸ் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சம்பத் டி சில்வா ,கிளை முகாமையாளர்கள் ,சர்வோதயத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் கரீம் உட்பட சர்வோதய பிரதிநிதிகள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது முதலாவது கொடுக்கல் வாங்கல் சேவையும் இடம்பெற்றதுடன் வாடிக்கையாளர்களுக்கு பரிசும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு சேமிப்பு கணக்கு,சிறுவர் சேமிப்பு கணக்கு,நிலையான வைப்பு,ஈட்டு கடன் ,தங்கக் கடன்,வாகனக் கடன்,வியாபாரக் கடன் ,நுண்நிதிக் கடன் போன்ற சேவைகள் இங்கு உள்ளதாக டி.டி.எப்.சி. தேஷோதய டெவ்லொப்மென்ட் பினான்ஸ் கம்பனியின் தலைவர் தலைவர் டாக்டர் வின்னியா ஆரியரட்ன தெரிவித்தார்.
இலங்கையில் டி.டி.எப்.சி. தேஷோதய டெவ்லொப்மென்ட் பினான்ஸ் கம்பனிக்கு 30 கிளைகளும்,32 சேவை நிலையமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.