(சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தங்களது வேலையை விட்டுச்செல்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அம்மாவட்ட வாழ்வின் எழுச்சி (திவிநெகும ) திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.
வாழ்வின் எழுச்சி திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து, இத்திணைக்களத்தினுள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்படுதல் தொடர்பான 04 தெரிவுகள் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
இதன் அடிப்படையில் 04 சமுர்த்தி முகாமையாளர்களும் 72 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தங்களது வேலையை விட்டுச் செல்வதற்கு சம்மதித்துள்ளதாகவும்,
அதேபோன்று, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை பெற்றுக்கொண்டு திவிநெகும திணைக்களத்தில் தொடர்ந்து இருப்பதற்கு 61 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சம்மதித்துள்ளனர்.
வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினுள் உள்வாங்கப்பட்டு ஓய்வூதியத்திட்டத்தின் ஊழியராகச் செல்வதற்கு 58 சமுர்த்தி முகாமையாளர்களும் 276 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் சம்மதித்துள்ளனர்.
இதேவேளை வாழ்வின் எழுச்சி ( திவிநெகும ) திணைக்களத்தினுள் புதிய நியமனங்களை பெறுவதற்காக 198 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.