(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச வர்த்தகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களின் இடமாற்றத்தை கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்தக் கோரியுமே மேற்படி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
கடந்த ஒன்றறை வருடங்களாக செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் மேற்படி பிரதேச செயலாளர் அவர்கள் ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் உள்ளிட்ட பல இடங்களை புனரமைப்பு செய்துள்ளதுடன், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முதலிடம் பெறக்கூடிய பிரதேச செயலகமாக மாற்றியுள்ளதால் இவரின் இடமாற்றத்தை இரத்துச்செய்யக்கோரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருவதுடன் மேற்படி இடமாற்றத்தை ஏற்படுத்திய சுதந்திரக் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் அருன்தம்பிமுத்து அவர்களையும் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்த மேலதிக செய்திகளை எமது இணையத்தளத்தில் எதிர்பாருங்கள்.