சித்தாண்டி-சின்னவெளிக் கண்டத்தில் நடைபெற்ற அறுவடை விழா (படங்கள்)

(நித்தி) உறுகாமத்திட்டக்குழு அணுசரனையில் சித்தாண்டி, சின்னவெளி கண்டத்தில் நடைபெற்ற காலபோக அறுபடை விழா உறுகாமத்திட்ட, திட்டமுகாமைத்துவ குழு தலைவர் திரு.எம்.மகேந்திரன் தலைமையில் இன்று (29.07.2014) காலை சுமார் 11.45 மணியளவில் சித்தாண்டி சின்னவெளி கண்டத்தில் நடைபெற்றன.

இவ் அறுபடை விழாவிற்கு பிரதம அதிதியாக நீர்பாசன நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எந்திரி.ஐவன்.த.சில்வா கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதி நீர்பாசன பணிப்பாளர் நாயகம் எந்திரி.பத்ரா கமலதாஸ, விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ், மட்டக்களப்பு நீர்பாசனப் பணிப்பாளர் எந்திரி.எஸ்.மோகனராஜா மற்றும் அதிதிகளான ஏறாவூர்பற்று பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளா ஆர்.கங்காதரன், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் திரு.என்.சிவலிங்கம், உறுகாம பிரதேச நீர்பாசனப் பொறியியலாளர் எந்திரி.எஸ்.ஹேமகாந் மற்றும் பதின்மூன்று விவசாய அமைப்புகளின் குழு தலைவர்கள் உறுப்பினர்கள், விவசாயிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருப்பதை படங்களில் காணலாம். 
இவ் விழாவிற்கு வருகைதந்த அதிதிகளினால் சுபவேளையில் சித்தாண்டி, சின்னவெளி கண்டத்திற்குரிய ஆறுபடையை ஆரம்பித்துவைத்தனர்.