மண்முனை தென் எருவில் பிரதேச செயலக மத்தியட்ச சபை அங்குரார்ப்பணம்

( ரவிப்ரியா )
மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்தின் புதிய மத்தியட்ச சபை அங்குரார்ப்பண நிகழ்வு செயலகத்தின் கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெட்ணம்
தலைமையில் 05.07.2012 சனிக்கிழமை வைபவ ரீதியாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் மத்தியட்ச சபை ஆணைக்குழு தலைவர் ஹெக்டர் யாப்பாவால் ஒப்பிமிடப்பட்ட 31 மத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் சமூகமளித்த அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜி.சுகுணன், கஞவாஞ்சிக்குடி பொலிஸ்; நிலைய பொறுப்பதிகாரி நிஷhந்த லொக்குகே, மற்றும் உதவிப்பொலிஸ் அதிகாரி பி.ரி.நஷீர், பிரதேச  செயலக நிருவாக உத்தியோகத்தர்களான தவேந்திhன், இராசதுரை, ஆலயங்களின் தலைவர்கள், கிரா சேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


சபையின் தவிசாளராக பெரியகல்லாற்றைச் சேர்ந்த  தென்கிழக்கு பல்கலைக் கழக விஞ்ஞானப் பிரிவு விரிவுரையாளர் சுஜா வரதராஜன் பதவி ஏற்றுக் கொண்டார். சமூக சேவையாளரான இவர் பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் அபிவிருத்திச் சபையின் செயலாளராகவும் அரும்பணி ஆற்றிக் கொண்டிருக்கின்றார். பிரதேச கல்வி வளர்ச்சியில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். சபையின் உப தவிளாளராக பட்டிருப்பு கல்விவலய ஆங்கில மொழிக்கான சேவைக்கால ஆலோகராகப் பணியாற்றி வருகின்றார். சமூக சேவையில் மிகுந்த அக்கறையுடன் செயற்படுபவர்.

இதேபோல் இச்சபையில் அங்கம் வகிக்கும் அனைவருமே சிறந்த கல்விமான்களாகவும், சகல துறைகளிலும் போதியளவு அனுபவம் கொண்டவர்களாகவும், ஏற்கனவே இது சார்ந்த பதவி வகித்தவர்களாகவும் காணப்படுவது இச் சபையின் சிறப்பம்சமாகும். எனவே இச் சபை மூலம் பிரதேச மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். பணி சிறக்க வெற்றி நியூஸ் வாழ்த்துகின்றது.